தேசிய கீதம்.. தேசப்பற்று: பிரகாஷ் ராஜ் அதிரடி பேச்சு

“நடிகர்கள் திடீரென அரசியலுக்கு வர கூடாது. திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும்.    நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் நான் விரும்பவில்லை. கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரப்போவதில்லை.

நடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக்கூடாது” என்று பேசி அதிரவைத்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

இப்போது தேசப்பற்று குறித்தும் தனது கருத்துக்களை அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

பெங்களூருவில் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “திரையரங்குகளில் தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்பதால் மட்டும் யாருக்கும் தேசப்பற்று வந்துவிடப் போவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பலராலும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.