டெல்லி :
ந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றின் வாசலில் இறந்து கிடந்த மயிலை காவல்துறை மரியாதையுடன் எடுத்துச்சென்று புதைத்தனர்.
நமது நாட்டின் தேசிய பறவையான மயில் ஒன்று டெல்லியின் பூங்கா ஒன்றில் இறந்து கிடந்தது குறித்து கேள்விப்பட்ட டெல்லி போலீசார், அந்த மயிலுக்கு தேசிய கோடி போர்த்தி காவல்துறை மரியாதையுடன் எடுத்துச்சென்றது அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

இதேபோல், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் டெல்லியில் உயிரிழந்த ஒரு மயிலை அரசு மரியாதையுடன் எடுத்து சென்று புதைத்த டெல்லி போலீசார், இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட தேசிய வனவிலங்குகள் சட்டத்தின் படி மயில் இறந்தது குறித்து வனத்துறைக்கு அறிவித்திருக்க வேண்டும் என்று விலங்குகள் நல தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கூறியிருந்தது. மேலும், இதுபோல் தகவல் அளித்தால் தான் விலங்குகளின் முக்கிய பாகங்கள் ஏதும் கடத்த படுவதற்காக வேட்டையாடப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று ஒரு பறவை இறந்திருப்பதும், அதற்கு உரிய மரியாதையுடன் எடுத்துச்செல்லும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இணைப்பு வீடியோ ….