டில்லி:

லைநகர் டில்லியில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

டில்லி உள்பட வட மாநிங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வரும் நிலையில், இன்று காலை முதலே பலத்த இடியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் ஓரங்கட்டினர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது.

டில்லியில் பிரபலமான பிரகாலாத்புர் மற்றும் ஷாட்டர்புர் பகுதியில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை மற்றும் பனியின் காரணமாக வானம் மேகமூட்டமாக இருந்ததால், அதிகாலை வர வேண்டிய விமானங்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்தன. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் இரவு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்கின்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து டில்லி வரும் ரயில்களும் டில்லியை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டில்லியில் இருந்து ரெயில்கள் புறப்பட முடியவில்லை. இதன் காரணமாக 15 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.