சென்னை

தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் பங்கு இயங்கும் நேரம் குறைக்கபப்டுள்ளது.

இந்தியாவை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாகத் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலாகி உள்ளது.  இந்த ஊரடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்களான மளிகைக்கடைகள், காய்கறிக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வசதிக்காக இவை அனைத்து காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   மக்கள் இதற்காகப் பெருமளவில் வெளியில் நடமாடுவதாக கூறப்பட்டது.  மேலும் மளிகை, காய்கறி வாங்க வெளியில் வந்ததாகக் கூறி பலரும் ஊரைச் சுற்றி வருவதாகவும் புகார் எழுந்தது.

எனவே தமிழக அரசு இந்த அத்தியாவசிய  பொருட்கள் விற்கும் கடைகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைந்துள்ளது.  அதன்படி வரும் ஞாயிறு முதல் மளிகைக்கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது

இதைப் போல பெட்ரோல் பங்குகளும் வரும் ஞாயிறு முதல் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது,