தேசிய அளவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டை: சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: தேசிய அளவிலான டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றிய பின்னர் இந்த திட்டத்தை அறிவித்து உள்ளார். பிரதமர் மோடி அறிவித்த இந்த திட்டம் முற்றிலும் டிஜிட்டல் மயமானது ஆகும்.

உரையில் அவர் தொடர்ந்து கூறியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும், தனித்தனியே சுகாதார அடையாள அடையாள அட்டை தரப்படும். அடையாள அட்டையில் சம்பந்தப்பட்ட நபரின் உடல்நிலை பற்றிய முழு விவரங்களும் அடங்கியிருக்கும்.

ஒவ்வொருமுறையும் சிகிச்சைக்கு செல்லும் போது, இந்த அட்டையில் அது பற்றிய விவரங்கள் இடம் பெறும். ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் சுகாதார அடையாள அட்டையில் குறிப்பிடப்படும் தனிப்பட்ட விவரங்கள்  பாதுகாப்பாக இருக்கும்.

மருந்துகள், சிகிச்சை விவரங்கள், டிஸ்சார்ஜ் விவரங்கள் உள்ளிட்டவை இடம் பெறும். மருத்துவமனைக்கு செல்லும் போது, இந்த அடையாள அட்டையை ஒரு முறை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.