டில்லி:

நாடு முழுவதும் ஒரே மாதிரியான  தேர்வுகளை நடத்தும் வகையில் புதிய அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாடு துறை அனுமதி அளித்து உள்ளது..

தேசிய அளவிலான உயர்கல்விக்கான நீட்  தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இதன் காரணமாக சிபிஎஸ்இ-க்கு வேலை பளு அதிகரித்துள்ளதாக எழுந்த பிரச்சினையை தொடர்ந்து, இதுபோன்ற தேர்வுகளை நடத்த புதிய அமைப்பை மத்திய அரசு  உருவாக்கி உள்ளது.

இதுகுறித்த வரைவு மசோதாவு தயாரிக்கப்பட்டு அதற்கு நிதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பப்பட்டது. இந்த வரைவு மசோதாவுக்கு நிதி அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு  அமைச்சகம்  ஒப்புதல் அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்த,  இனிமேல் தேசிய அளவிலான நீட் உள்ளிட்ட தேர்வுகளை இந்த அமைப்பே நடத்தும் என கூறப்பட்டுள்ளது.