சென்னை: தேசிக்கொடி அவமதிப்பு விவகாரத்தில், தமிழக பாஜகவோ, மத்திய பாஜகவோ தனக்கு ஆதரவு தெரிவிக்க முன்வராத நிலையில்,  தலைமை மேல் அதிருப்தியடைந்துள்ள எஸ்.வி.சேகர் பாஜகவில் இருந்து ஓட்டம்பிடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழக பாரதியஜனதா கட்சியில் சர்ச்சைக்கு பெயர்போனவர்களில் எச்.ராஜாவை அடுத்து நடிகர் எஸ்.வி.சேகரும் ஒருவர். தேவையற்ற கருத்துக்களை கூறி, ஊடக வெளிச்சத்தில் தான் இருப்பதை அவ்வப்போது காட்டிக்கொள்வது வழக்கம்.

ஏற்கனவே ஊடகத்துறையில் உள்ள பெண்கள் குறித்து மரியாதை குறைவாக பேசியது உள்பட பல்வெறு சர்ச்சைகளை உருவாக்கி, முன்ஜாமின்  பெற்றுக்கொண்டு ஓடி ஒளிந்து வருகிறார். சமீபத்தில் தேசியக்கொடியின் வண்ணங்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், அவர்மீது தேசிய கொடி அவமதிப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், தான் சொன்னது தவறு என தடாலடியாக மன்னிப்பு கோரியதைத்தொடர்ந்து, இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளுக்கும் ஒரு சுற்று சென்று வந்தவர், அதிமுகவில்  சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகும் ஆனால், அவரது நடவடிக்கை காரணமாக, ஜெயலலிதாவின் எச்சரிக்கை செய்யப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இணைந்தார். எஸ் வி சேகர் இதுவரை சேர்ந்து வெளியேறாத கட்சிகளே தமிழகத்தில்  இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லாக் கட்சிகளிலும் சிலகாலம் இருந்திருக்கிறார்.

தற்போது அவர் பாஜகவில் இருக்கிறார். ஆனால், அவரக்கு எந்தவொரு முக்கிய பதவியுடம் கொடுக்காமல், தமிழக பாஜக தலைமை அவரை டம்மியாக வைத்துள்ளது.  சமீபத்தில் தேசிய கொடி அவமதிப்பு  வழக்கில் அவரை கைது  செய்யப்படலாம் என தகவல் பரவியதும், முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடியதுடன், நான் எதற்கும் பயப்படுபவன் கிடையாது, எனக்கு ஜான் பாண்டியன் முதல் மீனவ சங்கத் தலைவர் அன்பழகன் வரை  நிறைய பேர் இருக்கிறார்கள். நான் என்ன செய்கிறேன் என்பது பிரதமர் மோடிக்கு தெரியும் என அங்கலாய்த்தார்.

இருந்தாலும், அவருக்கு பாஜவில் இருந்து யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை. தேசியக்கொடி அவமதிப்பு விவகாரத்தில் தன்னந்தனியாகவே காவல்நிலையம் வந்து மன்னிப்பு கோரினார். மேலும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி பிரம்மான பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், தனக்கு ஆதரவாக பாஜகவினர் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் உள்ள எஸ்.வி.சேகர்  மிழக மாநில பாஜக மேல் அதிருப்தி இருப்பதாகவும், அதனால் கட்சியை விட்டு விலக உள்ளதாகவும் மந்தைவெளி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, எஸ்.வி.சேகர் போன்ற சர்ச்சைக்குரியவர் கள் பாஜகவில் இருந்து வெளியேறினால், கட்சிக்கு நல்லதே என மாநில தலைமை கருத்துவதாகவும் கூறப்படுகிறது.

நல்லது நடந்தால் சரி…