நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்காலத் தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

டில்லி:

மிழகத்தில் தேனி பகுதியில் உள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள  மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ  ஆராய்ச்சி செய்வதற்கான பணியை தொடங்க  கடந்த 2011ம் ஆண்டு  சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து நியூட்ரினோ  ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசியல் கட்சிகளும் கடுமை யாக எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, இந்த நியூட்ரினோ ஆய்வகம் காரணமாக  மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும்,  சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்   என்று பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

மக்கள் எதிர்ப்பு காரணமாக நியூட்ரினோ ஆய்வகம் தொடங்க பசுமை தீர்ப்பாயம்  அனுமதி மறுத்தது. ஆனால், கண்டுகொள்ளாமல், நியூட்ரினோ திட்டத்திற்கான அனுமதியை புதியதாக வழங்கக்கோரி டாடா  நிறுவனம் மீண்டும் மத்திய அரசுடககு கடந்த ஜனவரி 5-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்க விண்ணப்பித்திருந்தது.

அதைத்தொடர்ந்து,  நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக்குழு தேனி மலைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டன. அதையடுத்து, இந்த திட்டத்தால் கதிர்வீச்சு அபாயம் இருக்காது என்றும், ஆய்வக பணியை மேற்கொள்ளலாம் என்றும், இதுகுறித்து அந்த பகுதி மக்களின் கருத்துக்களை கேட்க தேவையில்லை என்றும் பரிந்துரைத்து நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் மீண்டும் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில்,  நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை உத்தரவை ரத்து செய்யக் கோாி பூவுலகின் நண்பா்கள் அமைப்பைச் சோ்ந்தவா்கள் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு தாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த  மனுவில், நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். திட்டத்தால் சுற்றுசூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும், பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளை முன்வைத்திருந்தாா்.

இந்த வழக்கு தொடர்பாக பல கட்ட விசாரணை நடைபெற்று கடந்த அக்டோபா் 9ம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று  தேசிய பசுமை தீா்ப்பாயம்  தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதில், தேனி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள நியூட்ரினோ திட்டம் தொடங்க இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.