வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை….பசுமை தீர்ப்பாயம் முடிவு

டில்லி:

சுற்று சூழல் தொடர்பான வழக்குகளை டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் நியமனம் செய்வது தாமதமாகிறது. அதனால் மண்டல அளவிலான வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் டில்லியில் இருந்தே விசாரிக்க தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

 

தீர்ப்பாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு பதவிகள் காலியாக உள்ளது. புனே, போபால், சென்னை, கொல்கத்தா தீர்ப்பாய வழக்குகள் டில்லிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் மனுதாரர்கள் விசாரணைக்கு டில்லி செல்லும் நிலை உருவானது.

இதனால் மனுதாரர்களுக்கு நேரம், பணம் அதிகளவில் செலவானது. தீர்ப்பாயங்களில் தற்போது 3 ஆயிரத்து 236 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால் தற்காலிக ஏற்பாடாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரனை நடத்த தீர்ப்பாய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு வக்கீல்கள், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.