டெல்லி:

லைநகர்  டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம், அரசு இடத்தை காலி செய்ய டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவின் விசாரணையை தொடர்ந்து,  டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லியில் பத்திரிகை நடத்துவதற்காக வழங்கப்பட்ட இடத்தில் பத்திரிகையை நடத்தாமல் நிறுத்திவிட்டதால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு நகர் மேம்பாட்டு அமைச்சகம் அந்த கட்டிடத்தை அரசுக்கு திருப்பித் தரும்படி நோட்டீஸ் வழங்கியது.

அதில், ‘டெல்லி பெருநகர் மேம்பாட்டு அமைச்சகம் பத்திரிகை நிறுவனங்களுக்காக சலுகை விலையில் வழங்கப்பட்ட  டெல்லி என்கிளேவ் பகுதியில்  கட்டப்பட்ட நேஷனல் ஹெரால்டு ஹவுஸ் கட்டிடத்தை அந்த பத்திரிகை நிறுவனம்   உள்வாடகைக்கு விடுவதாக கூறி, அந்த கட்டிடத்தை மீண்டும் அரசிடமே திருப்பித் தந்து விடும்படி ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த பத்திரிகை நிறுவனத்தை காங்கிரஸ் கட்சி வாங்கியுள்ளது. தற்போது, அங்கு யங்  இண்டியன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதை  காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் நடத்தி வருகின்றனர். மேலும், நிறுவனத்தின் மற்ற தளங்கள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஏ ஜே எல் நிறுவனத்துக்கு  வருமானவரித்துறை 250 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.அந்த அபராத வழக்கை எதிர்த்து யங் இண்டியன் நிறுவனம்  மேல்முறையீடு செய்தது வைப்புத்தொகை வைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில்  கடந்த பல ஆண்டுகளாக   ஹெரால்டு ஹவுசில் எந்தவொரு நாளிதழும் அச்சிடவில்லை என்பதை அறிந்த  நகர மேம்பாட்டு அமைச்சகம் அலுவலகத்தை காலியும் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து, ஏ ஜே எல் நிறுவனத்தை நடத்தும் சோனியா, ராகுல்  இருவரும்  ஹெரால்டு ஹவுசை உடனடியாக காலி செய்து விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது. டில்லி உயர்நீதி மன்றத்தில்  இரு நபர் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ராஜேந்திர குமாரும் [தலைமை நீதிபதி] வி கே ராவும்  ஏ ஜே எல் கட்டிடத்தை காலி செய்யும்படி உத்தரவிட்டனர்.

டில்லி உயர் நீதிமன்றத்தில் இருவர் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை சோனியா தரப்பில் உச்சநீதி  மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது, விசாரணையை தொடர்ந்து, நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை காலி செய்யும்படி உத்தரவிட்ட டில்லி உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும், இதுகுறித்து டில்லி நகர் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியீட்டாளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தது.