புதுடெல்லி,
து அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும்  6755 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
drunk accident
பெரும்பாலான விபத்துக்கள் மதுவினாலே ஏற்படுகிறது. மதுக்கடைகளை தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஒட்டினால், ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. இருந்தாலும் மதுவினால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
டெல்லி மேல்சபையில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் பற்றி, உறுப்பினர் ஹரிவன்ஷ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலுரைத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனன்:
கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டதில்  6,755 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிர் இழப்புகள் பற்றியும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் வைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.