சென்னை கலவரம்…தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை:

சென்னை கலவரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் நேற்று கலவரத்துடன் முடிந்தது. இதில் காவல்துறையினர் நடத்திய தடியடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையம் தீ வைப்பு, போலீஸ் வாகனங்கள் தீ வைப்பு, கல் வீச்சு, கண்ணீர் புகை குண்டு வீச்சு என நேற்று சென்னையே போர்களம் போல் காட்சியளித்தது.

இது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.