தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது…டிடிவி தினகரன்

திண்டுக்கல்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கோமா நிலையில் உள்ளது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது. சத்துணவு முட்டையில் மட்டும் இல்லை எல்.இ.டி. பல்பு உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதியிலும் சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக உருவெடுப்போம். மத்திய அரசு தமிழக அரசை ஊழல் ஆட்சி என குற்றம் சாட்டுகிறது. ஆனால் எதற்காக ஆட்சி நடைபெற அனுமதிக்கிறது என தெரிய வில்லை. தமிழகத்தில் எந்த காலத்திலும் தேசிய கட்சி ஆட்சிகள் அமைக்க முடியாது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘லோக் ஆயுக்தா சட்டம் பல் இல்லாத பாம்பாக உள்ளது. கோவையில் மாணவி பலியான சம்பவத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள். கோவையில் போலி நிறுவனங்கள் தொடங்கி அரசு டெண்டர்களை எடுத்து வருகின்றனர். 8 வழிச்சாலை மக்களுக்கான திட்டம் கிடையாது. ஆட்சியில் இருப்பவர்கள் சொந்த தேவைக்காக நிறைவேற்ற துடிக்கின்றனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வரும்’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி