டில்லி

ட கிழக்கு இந்திய பகுதியை சேர்ந்த தேசிய மக்கள் கட்சி (நேஷனல் பியூப்பிள்ஸ் பார்ட்டி) தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய கட்சியாக ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட மொத்த மக்கலவை இடங்களில் 2% இடங்கள் அதாவது 11 இடங்களில் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் அல்லது சட்டப்பேரவை தேர்தல்களில் 6% வாக்குகள் மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தேசிய மக்கள் கட்சி கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் மக்களவை சபாநாயகர் புர்ணோ அஜிடோக் சங்மாவால் அவர் காங்கிரஸை விட்டு நீக்கப்பட்ட பிறகு ஆரம்பிக்கபட்டது. தற்போது இந்த கட்சி கான்ராட் சங்மாவின் தலைமையில் இயங்கி வரும் இந்த கட்சி பாஜகவின் அணியான தேசிய ஜனநாயக அணியில் இந்த பகுதியில் முதலிடம் பெற்றுள்ளது. மொத்த வாக்குகளில் 14.5% இந்தக் கட்சி பெற்றுள்ளது.

ஏற்கனவே மணிப்புர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ள இக்கட்சி தற்போது அருணாசலப் பிரதேசத்திலும் மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா மேகாலயாவில் முதல்வராகவும் இக்கட்சியின் ஜாய்குமார் மணிப்பூர் மாநில துணை முதல்வராகவும் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் இந்த கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கி உள்ளது. வடகிழக்கு இந்திய பகுதியில் இவ்வாறு அங்கீகாரம் பெறும் முதல் கட்சி என்னும் பெருமையை இக்கட்சி பெற்றுள்ளது, இக்கட்சிக்கு அகில இந்திய அளவில் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. இக்கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்ற எட்டாவது கட்சி ஆகும்.