குஷ்பு மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்! மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை:  பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாற்று திறனாளிகளின் தேசிய சங்கத்தினர், குஷ்பு மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் பதியுமாறு சங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
பாரதியஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது,  “சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ். ஆறு வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்குத் தெரிந்ததா? காங்கிரஸில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டுச் செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை என கடுமையாக சாடியிருந்தார்.
இதற்கு மாற்றுத்திறானாளிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மாற்றத்திறனாளிகளான தங்களை குஷ்பு இழிவுபடுத்தி உள்ளதாகவும், அவர்மீது தமிழகம் முழுவதும் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்து உள்ளது.