தேசிய திறனாய்வு தேர்வு: தமிழகத்தில் சென்னை மாணவர் ஆதித்யா முதலிடம்

--

டில்லி:

யர் படிப்புகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வகை செய்யும் என்டிஎஸ்சி எனப்படும் தேசிய திறனாய்வு தேர்வில், தமிழகஅளவில் சென்னையை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

‘தேசய திறனாய்வு தேர்வில் சென்னையைச் சேர்ந்த ஆதித்யா 197க்கு 183 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடினமான தேர்வாக கருதப்படும் இந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு அரசு தரப்பில், ஆராய்ச்சி படிப்பு, முதுகலை படப்படிப்பு போன்ற உயர் படிப்புகள், மருத்துவ உயர்படிப்புகளுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நடப்பு ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் 18ந்தேதி மாநில அரசால் நடத்தப் பட்டது.  இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 2வது கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்த தேர்வு  கடந்த மே 13ம் தேதி என்.சி.இ.ஆர்.டியால் நடத்தப்பட்டது.

இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 12 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 1000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சென்னையை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.