தேசியளவிலான பெண்கள் மல்யுத்த பயிற்சி – அக்டோபர் 10ல் துவக்கம்!

புதுடெல்லி: ஒத்திவைக்கப்பட்ட பெண்களுக்கான தேசிய மல்யுத்த பயிற்சி முகாம், அக்டோபர் 10ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியளவிலான பெண்களுக்கான தேசிய மல்யுத்த பயிற்சி முகாம், செப்டம்பர் 1ம் தேதி துவங்குவதாக இருந்தது. ஆனால், தீபக் புனியா மற்றும் வினேஷ் போகத் என்ற இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், தற்போது அக்டோபர் 10ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50, 53, 57, 62, 67 மற்றும் 76 கிலோ என்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வகையிலான எடைப்பிரிவினருக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இப்பயிற்சி முகாம் டிசம்பர் 31 வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, வெளிநாட்டில் பயிற்சிபெற விரும்பிய வினேஷ் போகத், உள்நாட்டு பயிற்சியிலேயே பங்கேற்கிறார்.