ரஷ்யாவில் அக்டோபர் மாதம் நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி முகாம்!

--

மாஸ்கோ: வரும் அக்டோபர் மாதத்தில், நாடு முழுமைக்குமான கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு ரஷ்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, அந்நாட்டு சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ கூறியுள்ளதாவது, “அக்டோபர் மாதத்தில் பரந்தளவிலான தடுப்பூசி முகாமிற்கு நாங்கள் திட்டமிடுகிறோம். ஏனெனில், படிப்படியாக சிகிச்சையளிப்பதற்கான புதிய அமைப்பை நாம் துவங்க வேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக, கமாலியா அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. இந்த தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும்.

இந்த தடுப்பு மருந்து முகாமிற்கு, முழுவதுமாக அரசின் பட்ஜெட்டிலிருந்தே செலவு செய்யப்படும்.” என்றார்.