நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமாகி வருவதால், மருத்துவ நிபுணர்கள் மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவிக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதிஅமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதில்,  நாட்டில் நிலரவும் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, தடுப்பூசி இறக்குமதி மற்றும் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தவும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்து குறித்தும், மருந்துகள் இருப்பு  உள்பட பல நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், உச்சநீதிமன்றம், மருத்துவ நிபுணர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருவது குறித்தும், இன்றைய  மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என பிரதமர் தெரிவித்திருந்த நிலையில், தொற்று பரவலை தடுக்க மீண்டும் பொதுமுடக்கம் போட வேண்டும்எ ன உலக சுகாதார அமைப்பு, எய்ம்ஸ் டைரக்டர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போன்றோர் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.