நாடு முழுவதும் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு… மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி:

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஏற்கனவே 2 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது மே 4ந்தேதி முதல் 3வது முறையாக ஊரடங்கு மேலும 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவேண்டும் என்று மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும்  மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

This slideshow requires JavaScript.