நாளை நாடு தழுவிய பாரத் பந்த்: வங்கி ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

டெல்லி: நாளை நடைபெறும் வேலைநிறுத்தம் காரணமாக, வங்கி ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கை மற்றும் தொழிலாளர்கள் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஎன்டியூசி, ஏஐடியூசி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

நாடு முழுவதும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. அதில் பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்களும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளன. .

அதனால், ஏடிஎம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படலாம் என்று கூறப் படுகிறது. இருப்பினும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் சங்கங்களில் தங்களது ஊழியர்கள் குறைந்த அளவே உள்ளனர். எனவே வங்கி பரி வர்த்தனை உள்ளிட்ட சேவையில் பெரிய அளவு பாதிப்பு இருக்காது என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

 

கார்ட்டூன் கேலரி