கொரோனா: நாடு முழுவதும் இன்று 92 ஆயிரம் பேர் பேதிப்பு; 1136 பேர் பலி

டெல்லி:  நாடு முழுவதும் இன்று 92 ஆயிரம் பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  1136 பேர்  உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கடந்த 24 மணி நேரத்தில்  நாடு முழுவதும் புதிதாக 92,071 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,46,428 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதை நிலையில், கொரோனா தொற்று காரணமாக  9,86,598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளான  48 ஆயிரம் பேரில், 37,80,108 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

ஒரே நாளில் 1,136 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 79,722 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே கொ ரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு தற்போது 2,80,138 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 29,115 பேர் பலியாகியுள்ளனர்.

2வது இடத்தில் ஆந்திரம் 95,733 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4,846 பலி எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.