நாளை நடைபெறும் அகில இந்தியத் தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவு! வைகோ

சென்னை:

நாளை நடைபெறும்  அகில இந்தியத் தொழிலாளர் போராட்டத்துக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கும் அதன் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

அனைவருக்கும் வேலை வழங்கு, விலைவாசியைக் கட்டுப்படுத்து, குறைந்தபட்ச ஊதியம் வழங்கு, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கு, ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்காதே, தொழிலாளர் நலச் சட்டங்களை – தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகளின் ஆதரவுச் சட்டங்களாக மாற்றாதே! விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கொடு, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய் ஆகிய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக 2020 ஜனவரி 8 ஆம் நாள் நடைபெற இருக்கும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி