நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி
நடிகை அனகா
இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு
இசை ஹிப்ஹாப் ஆதி
ஓளிப்பதிவு அரவிந்த் சிங்

உலக நாடுகள் அனைத்தும் வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு மருந்து கம்பெனியை காரைக்காலில் திறக்க அரசியல்வாதி கரு.பழனியப்பன் பெர்மிஷன் கொடுக்கிறார். அந்த கம்பெனி காரைக்காலில் உள்ள ஒரு ஹாக்கி கிரவுண்டில் வருகிறது.

மைதானத்தை விட்டுவிட கூடாது என்று பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் பல்வேறு வழிகளில் போராடுகிறார். ஒரு கட்டத்தில் ஹாக்கி விளையாடி வெற்றி பெற்றால் மைதானத்தை மீட்கும் சூழல் உண்டு என்று தெரிய வர கிரவுண்ட் தங்கள் கைக்கு வரவேண்டும் என்று களத்தில் இறங்குகிறார்..

பிரான்ஸ்க்கு சென்று செட்டிலாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழும் ஆதி ஹாக்கி வீராங்கனையான அனகாவை ஒரு மோதலில் சந்திக்கிறார்.அனகா மீது காதல் ஏற்பட இவருடன் பழக நினைக்கும் ஆதி, அனகா பயிற்சி செய்யும் மைதானத்திற்கு நண்பர் மூலமாக செல்கிறார்.

ஹாக்கி தேர்வின் போது அனகாவிற்கு பிரச்சனை வர , இதில் ஆதி தலையிட்டு, கனகாவின் தேர்வுக்கு உதவி செய்கிறார் ஆதி . அப்பொழுது தான் ஆதி இன்டர்நேஷனல் அளவில் இந்திய ஜூனியர் அணிக்கு விளையாடியவர் என்று தெரியவருகிறது.

இவர்கள் அனைவரும் இணைந்து கிரவுண்டை மீட்டார்களா என்பது தான் “நட்பே துணை “