புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘வால்டர்’.

11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கப்பட்டது.

முழுக்க முழுக்க காவல்துறையை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில், வில்லனாக இயக்குநர் கெளதம் மேனன் நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. அதற்கேற்ப, சிபிராஜ் உள்ளிட்ட படக் குழுவினருடன் கெளதம் மேனன் இருக்கும் புகைப்படமும் வெளியானது. ஆனால், கெளதம் மேனன் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கெளதம் மேனனுக்குப் பதில் அந்தக் கதாபாத்திரத்தில் நட்டி என்று அழைக்கப்படும் நட்ராஜ் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.