இயற்கை விவசாயமே சிறந்தது! ஐரோப்பிய விஞ்ஞானிகள் கருத்து

 

20 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இயற்பியல் மாமேதையான அல்பர்ட் ஜன்ஸ்டீனின் மனித இனத்தின் அழிவுக் கான அறிகுறியாகத் தேனிக்களின் அழிவு இருக்கும் என்று ஏற்கனவே கூறி உள்ளார்.

ஜன்ஸ்டீன்

இயற்பியல் மேதை ஒருவரே உயிரியல் குறித்து கூறியிருந்தது தற்போது உண்மையாகி வருகிறது.

தற்போது ஆராய்ச்சியாளர்கள் இயற்கை விவசாயத்தையே வலியுறுத்தி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் விவசாயத்திற்கு ரசாயண பூச்சி மருந்துகள் தெளிப்ப தால் புழு பூச்சிகள் அழிந்து வருகிறது. தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவிவருவது பூச்சிகள்தான் என்பது அனை வரும் அறிந்ததே.

உலக அளவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உணவு பொருட்களை அதிக அளவு விளைவிக்க உலகம் முழுவதும் ரசாயண உரங்களும், தாவரங்களில் உள்ள பூச்சிகளை அழிக்க ரசாயண பூச்சிக்கொள்ளி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக விவசாயத்திற்கு பெரிதும் உதவிகரமாக, இயற்கை மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகளான தேனி மற்றும் வண்ணத்து பூச்சிகள் உள்ளிட்ட பூச்சி இனங்கள் அழிந்து வந்தன.

விவசாயத்துக்கு மருந்துகள் தெளிப்பதால், பட்டாம் பூச்சி மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை கவலை யளிக்கக்கூடிய அள விற்கு குறைந்து வருவது எதிர்கால உணவு உற்பத்திகுறித்து சிந்திக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் .

இந்த ரசாயணங்களால், சில நேரங்களில் தேன் கூட்டி லிருந்து உணவு தேடி செல்லும் தேனீக்கள் மீண்டும் கூட்டிற்கு வரமுடியாமல் மரணத்தை தழுவுகிறது. பல நேரங்களில் தேனீங்கள் தங்களது கூடுகளிலேயே மரணித்துவிடும் நிலையே ஏற்படுகிறது.

விவசாய விளைநிலைங்களில் உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லிமருந்தான நியோநிகோடி னாய்ட்ஸ்-ல்  தேனீக்கள் போன்ற பல பூச்சி இனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது விவசாய விளைநிலங்களில்  பயன்படுத்தப்பட்டு வரும் மூன்று வகையான பூச்சி கொல்லி மருந்துகளுக்கு ஐரோப்பா தடை விதித்துள்ளது.

இயற்கை உரம்

இதன் காரணமாக தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வாதாரம் மீண்டும் துளிர்த்து உள்ளது.

இதுகுறித்து தேனீ வளர்ப்பு நிபுணரான எஸ்.இ.மேக்கிரேகர் என்பவர் 1976ம் ஆண்டு  “தாவர மகரந்த பொருளாதாரம்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை தாக்கல் செய்தார்.

அதில், தாவரங்களில்  சுயமகரந்த சேர்க்கை நடைபெறு கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், குறைவான மகரந்த சேர்க்கை குறைவான மகசூலை கொடுக்கும் அல்லது தாமதமான மகசூலை கொடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபோல் 1917ம் ஆண்டு கேட்ஸ் என்ற ஆராய்ச்சியாளரும்,  மகரந்த சேர்க்கைக்கு முகவர்களாக இருப்பது தேனீக்கள் என்றும், தேனீக்கள் இல்லையென்றால் பயிர் விளைச்சல் குறையும் என்றும் என விவசாயிகளுக்கு எச்சரித்துள்ளார்.

இதையடுத்து  ஐரோப்பிய யூனியன்  2013 ம் ஆண்டில் பிரபலமான பூச்சிகொல்லி மருந்துகளான, நியோ நிகோடினாய்ட்ஸ், க்ளோதியானிடின், இமிடாக்லோப்ரிட் மற்றும் தயாமீதோக்சாம்  ஆகியவற்றிற்கு தடை விதித்தது.

அதைத்தொடர்ந்து தாவரங்களை சார்ந்த வாழும் புழு பூச்சிகள், ஒட்டுண்ணி குளவிகள் மற்றும் லேடிபக் போன்ற வேட்டையாடும் பூச்சிகள் பலமடங்கு அதிகரித்துள்ளன.

அதுபோல உழவர்களின் தோழனாய் விளங்கும் மண்புழுக்கள் போன்ற உயிரி னங்களும் மேம்படுத்தப்பட்ட மண் உற்பத்தியின் மூலம் அதிகரித்துள்ளது.

சர்வதேச ஆய்வு முடிவுகளின்படி, உலக நாடுகளில் தன்னிறை வான உணவு உற்பத்திக்கு விவசாயம் சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்றும்,

சர்வதேச கைகூலிகளான தனியார் நிறுவனங்களின் ஆலோ சனையின் பேரில் உயிரியல் நிறுவனங்கள் செயல்படக்கூடாது என்றும் விவசாய விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம்மாழ்வார்

மேலும், ஐக்கியநாடுகள் சபை இதில் தலையிட்டு, இயற்கை விவ சாயம் தொடர்பான பொறுப்பை சர்வதேச விவசாய நிபுணர்களிடம் கொடுத்து அவர்களின் ஒருமித்த கருத்தின்படி செயல்பட்டால் உலகில் பட்டினியை ஒழிக்கலாம் என்று கூறி உள்ளனர்.

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவதின் மூலமும், அதுபோல ஒவ்வொரு பகுதிகளின் உணவுத் தேவையை அங்குள்ள சிறு குறு விவசாயப் பண்ணைகளின் மூலமும் தீர்க்க முடியும் என்றும் கூறி உள்ளனர்..

இதைத்தான், தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்க ளில் ஒருவர் ஆன வேளாண்விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களும் தனது இறுதி மூச்சு வரை வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed