இயற்கை மரணத்துக்கும் இன்சூரன்ஸ் உண்டு…..உயர்நீதிமன்றம்

சென்னை:

பணியின் போது போலீசார் இயற்கை மரணம் அடைந்தாலும் அது இன்சூரன்ஸ் திட்டத்தில் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி கூறுகையில்,‘‘ பணியின் போது இயற்கையான முறையில் மரணம் அடைந்தாலும் அது இன்சூரன்ஸ் திட்டத்தில் தான் வரும்.

இந்த வகையில் மாரடைபால் இறந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் தொகையை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.