இயற்கை வளங்களை அழித்து பசுமைவழி சாலை போட வேண்டியதில்லை: திருநாவுக்கரசர்

டில்லி:

யற்றை வளங்களை அழித்து,  சேலம் – சென்னை இடையே 8 வழி பசுமைச் சாலை‘ திட்டம் அமைக்கப்பட வேண்டிய தேவையில்லை என்று  என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி பிறந்தநாளை யொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க  டில்லி சென்றிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தொடர்ந்து டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை சந்தித்து நலம் விசாரித்தேன் என்றார்.

மேலும், கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர்,  கமல்ஹாசன் அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், இந்த  சந்திப்பின் போது கூட்டணி குறித்துப் பேசியதாகத் தெரியவில்லை என்று கூறினார்.

ராகுல், கமல் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பொன்னார் பேசியது குறித்து கேள்விக்கு, “காங்கிரஸ் கட்சி காலாவதியான புத்தகம்’ என்று தரம்தாழ்ந்த வகையில் விமர்சித்துள்ளார். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.

மேலும்,  சேலம் – சென்னை 8 வழி பசுமைப் சாலைத் திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்  விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக  தமிழ்நாட்டின் இயற்கை சமநிலை பாதிக்கப்படும். இயற்கை வளங்களை அழித்து எட்டு வழி பசுமைச் சாலையை போட வேண்டிய தேவை இல்லை. ஏற்கெனவே உள்ள சாலைகளை சீரமைத்தாலே போதுமானது என்று கூறினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதை வரவேற்பதாக கூறிய திருநாவுக்கரசர், விரைவில் மருத்துவ மனைக் கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

You may have missed