உண்மையான இந்தியன் அல்லாத அட்னான் சாமிக்கு பத்மஸ்ரீ விருதா? :  ராஜ் தாக்கரே கட்சி கண்டனம்

மும்பை

பிரபல பாடகர் அட்னான் சாமிக்கு பத்மஸ்ரீ விருது அளிப்பதற்கு ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனை கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

                                                    அட்னான் சாமி

இந்த வருடக் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகிகள் சி சரோஜா மற்றும் சி லலிதா,  பாடகர் அட்னான் சாமி ஆகியவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.    அட்னான் சாமிக்கு விருது வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அர்ஷத் சாமி கான்

மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரே தலைமையின் கீழ் இயங்கி வரும் நவநிர்மாண் கட்சி பாடகர் அட்னான் சாமிக்க்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிவிட்டர் பதிவில் இதற்கு இரு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நவநிர்மாண் கட்சி, “அட்னான் சாமியின் தந்தை அர்ஷத் சாமி கான் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்.  அவர் பாகிஸ்தான் நாட்டின் விமானப்படையில் விமானியாக பை புரிந்துள்ளார்.   கடந்த 1952 ஆம் வருடம் நடந்த போரில் அவர் இந்தியா மீது விமானத் தாக்குதலை நடத்தி உள்ளார்.

அத்துடன் அந்த போரில்  அர்ஷத் தாக்குதல் நடத்தியதால் அந்நாட்டின் உயரிய ராணுவ விருதான சிதாரா ஈ ஜுரத் என்னும் விதை பெற்றுள்ளார்.   இது அந்நாட்டின் தீரச் செயல்களுக்கு அளிக்கப்படும் தேசிய விருதும் ஆகும்.  கராச்சியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை அருங்காட்சியகத்தில் அர்ஷத் பெயர் உள்ளது.

இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக விமானப்படை தாக்குதல்  நடத்தி அதற்காக விருதும் பெற்றவரின் மகனுக்கு இந்திய தேசிய விருதான பத்மஸ்ரீ வழங்குவது கடும் கண்டனத்துக்கு உரியது.  அட்னான் சாமி உண்மையான இந்தியன் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.