குற்ற விசாரணை பின்புலத்தில் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் வி 1 . இதில் அருண் காஸ்ட்ரோ நாயகனாக நடிக்க விஷ்ணுப்ரியா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஒரு அபார்ட்மெண்ட்டில் வி1 என்ற எண் கொண்ட வீட்டில் நடக்கும் கொலை பற்றிய விசாரணையே படம். ஆனால் ஹீரோக்கு இருட்டைப் பார்த்தால் பயம் என்ற பிரச்சினை இருக்கும்.

கதாநாயகனுக்கு உதவும் பெண் போலீஸாக விஷ்ணுப்ரியா நடிக்கிறார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.

’வட சென்னை’, ’மெட்ராஸ்’, ’மகளிர் மட்டும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாவல் நவகீதன் இப்படத்தை இயக்குநராகிறார்.