நவக்கிரகங்களின் தமிழ்ப் பெயர்களும் அதன் சிறப்புகளும்

நவக்கிரகங்களின் தமிழ்ப் பெயர்களும் அதன் சிறப்புகளும், ஓர் பார்வை :-

1.சூரியன்- (ஞாயிறு) சூரியனார் கோவில்,.

தமிழ்ப் பெயர் : கதிரவன்

நவக்கிரகங்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். நவக்கிரக கோயில்களில் முதல் கோயில். இவர் சிம்ம ராசிக்கு அதிபதியாக விளங்குகிறார். அனைத்து கிரகங்களுக்கும் நடுவில் அமர்ந்திருப்பார்.

வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம்

2.சந்திரன் -(திங்கள்) -திங்களூர் சந்த்ரன் கோயில், (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், திருவையாறு)

தமிழ்ப் பெயர்: சோமன்

சிவபெருமான் தன் ஜடாமுடியில் சந்திரனை அணிந்திருப்பார் . நவக்கிரக கோயில்களில் இரண்டாவது தலம் இது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது தோன்றியவர். கடக ராசிக்கு இவர் அதிபதியாக விளங்குகிறார்.
வாகனம்: மான்.

3.செவ்வாய்- (அங்காரகன்) – வைத்தீஸ்வரன் கோவில்.

தமிழ்ப் பெயர்- நிலமகன்.

இவர் வீரபத்திரரின் அம்சம். பூமாதேவியின் மகனாகக் கருதப்படுகிறார்.
நவக்கிரகங்களில் மூன்றாவதாகக் கருதப்படுகிறார்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு இவர் அதிபதி.
வாகனம் : ஆடு.

4.புதன் – அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு

தமிழ்ப் பெயர் : அறிவன்

மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு இவர்தான் அதிபதி. சந்திரனுடைய குமாரர் இவர். தீய க்ரஹங்கள் விளைவிக்கும் கெடுதல்களைத் தடுக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
வாகனம் : சிங்கம்.

5,குரு (வியாழன்) – ஆபத்சகாயேஸ்வரர் கோயில்,ஆலங்குடி.

தமிழ்ப் பெயர் : சீலன்

இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், அனைத்து தோஷங்களும் நீங்கும். “குரு பார்க்கக் கோடி புண்ணியம்” என்பது பழமொழி. தனுசு , மீனம் ராசிகளுக்கு இவர் அதிபதி
வாகனம் – யானை.

6.சுக்கிரன் (வெள்ளி) – கஞ்சனூர்

தமிழ்ப் பெயர்: கங்கன்

இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர்.
ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதி.
வாகனம் : வெள்ளைக் குதிரை.

7.சனி – சனீஸ்வரன் சனீஸ்வர பகவான் திருக்கோயில், திருநள்ளாறு.(தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்)

தமிழ்ப் பெயர் : காரி

இவர் சூரியனுடைய குமாரர். சனியைப் போலக் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை  என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் – ராசிகளுக்கு அதிபதி. தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும்  சனிபகவான், சிவபெருமான் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
வாகனம் :காகம்

8.ராகு – சண்பகாரண்யேஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம், கும்பகோணம்.

தமிழ்ப் பெயர் : கருநாகன்

இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். அதிக வீரம் உடையவர்.
ராகு பகவான் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் எனப் பெயர் வந்துள்ளது
வாகனம் : புலி

9.கேது – கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்,

தமிழ்ப் பெயர்: செந்நாகன்

இவர் நாகத்தலையும், மனித உடலும் உடையவர். இந்த கோயிலைச் சோழர்கள் கட்டினார்கள். குடும்ப வ்ருத்தி பெற இவரை வேண்டலாம்.

நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும் பிறகு கேதுவையும் வணங்க வேண்டும்
வாகனம் : மீனம்