கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த திரையுலகிற்கு நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்படும் ‘நவரசா’ ஆந்தாலஜி தொகுப்பில், கெளதம் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.

‘நவரசா’ ஆந்தாலஜி தொகுப்பில் மொத்தம் 9 குறும்படங்கள் இடம்பெறுகின்றன. கெளதம் மேனன், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகியோர் தலா ஒரு படங்களை இயக்குகின்றனர்.

இந்த படத்தில் சூர்யாவுடன் நடிக்க பிரயகா மர்டின் இணைந்துள்ளார். மலையாள திரையுலகில் அறிமுகமான இவர், மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியும், வரவேற்பும் பெற்ற ‘பிசாசு’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா,விஜய்சேதுபதி,அரவிந்த் சுவாமி,சித்தார்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தங்களது 2021 ரிலீஸ்கள் குறித்து நெட்ஃபிலிக்ஸ் ஒரு ப்ரோமோ வீடீயோவை வெளியிட்டுள்ளனர்.இதில் நவரசா படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளது,இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.