மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நவரசா’ வெப் தொடரில் நடிக்கும் சூர்யாவின் அட்டகாசமான லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கெளதம் மேனன், ஹலிதா ஷமீம், கே.வி. ஆனந்த், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் 9 குறும்படங்களை இயக்கி வருகின்றனர். இந்த வெப்தொடர் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், நித்யா மேனன், ரோபோ சங்கர், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், அழகம் பெருமாள், ரித்விகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த 9 கதைகளில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் சூர்யா தனியாக இருக்கும் புகைப்படம் மற்றும் சூர்யா, கெளதம், பி.சி.ஸ்ரீராம் மூவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் ‘நவரசா’ திரைப்படம் குறித்த மற்ற அறிவிப்புகளும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.