நவராத்திரி -50 குறிப்புகள் பகுதி 5 மற்றும் இறுதிப் பகுதி

நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகளில் 41-50 வருமாறு

     41.  நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால்                    கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

  1. நவராத்திரிதொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லை என்றால் கவலைப் படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
  1. நெமிலியில்திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்குக் கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.
  1. நவராத்திரிநாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளைக் கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.
  2. சுகமானவாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.
  1. ராமபிரான்நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.
  1. கொலுபொருட்களைப் பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும். தேவியைநவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
  2. ஸ்ரீராமர்,விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர்  நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.
  1. வசதி,வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையைத் தினமும் முறைப்படி சங்கல்பம், கணபதி பூஜை, பிரதான பூஜை, கண்ட பூஜை பிராண பிரதிஷ்டை, அங்க பூஜை, அஷ்டோத்திர நாமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.