நவராத்திரி -50 குறிப்புகள் பகுதி 4

நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகளில் 31-40 வருமாறு

  1. நவராத்திரிவிரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்துத் தூங்க வேண்டும்.
  2. அம்பிகைசங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
  3. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.
  4. நவராத்திரி கோலத்தைச் செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
  5. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
  6. கொலுவைத்திருப்பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.
  1. நவராத்திரி9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்குப் பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தைத் தானமாகக் கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாகச் சென்னையில் அதிகரித்துள்ளது.
  1. முத்தாலத்திஎன்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாகக் கிடைக்கும்.
  1. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலிப் பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.
  1. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்குப் பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.