2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற டீடு சந்த்துக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை – ஒடிசா முதல்வர்

ஆசிய விளையாட்டு போட்டியில் இரட்டை வெள்ளிப் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை டூடி சந்த்துக்கு ரூ. 3 கோடி பரிசுத் தொகையாக அளிக்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.

dutee-chand

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா நகரில் நடைப்பெற்று வருகின்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் கலந்து கொண்ட டூடி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து வெள்ளிப்பதக்கம் வென்றதன் காரணமாக அவரின் சொந்த மாநிலமான ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்னாயக் ரூ.1.5 கோடியை பரிசுத் தொகையாக அறிவித்தார்.

இதையடுத்து புதன்கிழமை நடைபெற்ற 200 மீட்ட ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட டூடி சந்த் 2வது இடம் பிடித்து மீண்டும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் டூடி சந்த் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றார். இதனை தொடர்ந்து மீண்டும் ரூ. 1.5 கோடியை பரிசுத்தொகையை டூடி சந்துக்கு வழங்க உள்ளதாக நவீன் பட்னாயக் அறிவித்துள்ளார்.

ஆசிய போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றதன் காரணமாக ரூ.3 கோடி பரிசுத் தொகையை டூடி சந்த் பெற உள்ளார்.