ஒடிசாவில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக்கு தடை…நவீன் பட் நாயக்

புவனேஸ்வர்:

ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் மக்களிடம் நேரடியாக உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ அடுத்த 2 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக ஒடிசாவை உருவாக்குவதற்காக பிளாஸ்டிக் தடை செய்யப்படுகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று முதல் அமலுக்கு வருகிறது.

புவனேஸ்வர், கட்டாக், பெர்காம்பூர், சாமல்பூர், ரோர்கெலா, பூரி நகர், நகராட்சி பகுதிகளில் இது அமல்படுத்தப்படும். அனைவரும் வீடுகளில் மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதை வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பார்கள்’’ என்றார்.