மும்பை:
காராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை, கொரோனா நோயாளி ஒருவல்  பாலியல் பலாத்காரம் செய்த அவலம் நடந்தேறியுள்ளது. புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலேயே கொரோனா தொற்றில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா மாநிலம். அங்கு தொற்று அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்துதல் மையத்தற்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நடுத்தர வயது பெண், அங்கிருந்த சக நோயாளியால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள அவலம் அரங்கேறியுள்ளது.  ஜூலை-16 (வியாழக்கிழமை) இரவு மும்பையில் உள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இந்த கொடுமை நடைபெற்றுள்ளது.
நகராட்சி பராமரிப்பில் உள்ள குடியிருப்புகளைக்கொண்ட அந்த தனிமைப்படுத்துதல் மையத்தில் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட வரும் அந்த  பெண்ணும் சிறிது நேரம் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்ததாகவும், பல சமயங்களில் அந்த நபர், அந்த பெண்ணிடம் போலியான காரணத்தைக் கூறிஉதவிகளை செய்து வந்தாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்தே அடுத்தக்கட்ட அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்  பன்வேல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட  கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
தற்போது அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.