17 நாட்களில் 70 இடங்களில் பிரசாரம்: பஞ்சாப் அமைச்சர் சித்துவுக்கு தொண்டையில் காயம்

லூதியானா:

ஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பிரசார பீரங்கியுமான சித்து, கடந்த 17 நாட்களில் 70 இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால், அவரது தொண்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. தறபோது  அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

சித்து

சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்  ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா  மாநிலங்களில், கடந்த  17 நாட்களில் 70 பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்தார். இதன காரணமாக அவரது  குரல் நாண்கள் பாதிப்படைந்துள்ளது.

பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் பேச்சாளருமான முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கடந்த சில நாட்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும்  மாநிலங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வந்தார். கடந்த 17 நாட்களில் மட்டும் 70க்கும் மேற்பட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு காங்கிரஸ் ஆதரவு கோரி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதன் காரணமாக அவரது தொண்டடை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவரது தொண்டை குழாயில் உள்ள நாண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து  குறைந்தது 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவரது நண்பரும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் பிளேயருமான இம்ரான்கான்,  பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  அப்போது, குரு நானக் தேவ் என்ற 550 வது பிரகாஷ் பர்வத்தில்
கார்டர்பூர் சாஹிப்  பாதையை  திறக்க கோரினார். அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 28ந்தேதி கார்டர்பூர் நடைபாதை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.