சண்டிகர்:

பஞ்சாப் முதல்வருக்கும், நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்து, விரைவில் டில்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

டில்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த ஷீலா தீட்சித், சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், தற்போது அங்கு தலைமை இல்லாத சூழல் நிலவி வருகிறது.  டில்லி மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், கட்சியை வலுத்துப்படுத்த திறமையான தலைவர் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், டில்லி  மாநிக் காங்கிரசுக்கு  தலைவரை நியமிக்க வேண்டிய நிர்பந்தம் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னாள்  பஞ்சாப் அமைச்சர், நவ்ஜோத் சிங் கை டில்லி மாநிலத் தலைவராக நியமிக்கலாமா என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், தனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும், அதை திறம்பட செய்ய தான் தயாராக இருப்பதாக   சித்து கட்சி மேலிடத்தில் கூறி உள்ளதாகவும், இதன் காரணமாக, அவர் விரைவில் டில்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.