தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை,

மிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குமரியைச் சேர்ந்த குமரி மகா சபா என்ற அமைப்பு தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் மாவட்டந்தோறும் தொடங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டு வரும்போது, அரசு எதிர்ப்பது ஏன் என்றும், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியாக செயல்பட்டால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளியை நாடுகிறார்கள் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசின் மாநில கொள்கையில் இரு மொழி பாடத்திட்டங்கள் இருப்பதால் நவோதயா பள்ளிகள் கொண்டு வந்தால் மாநில அரசின் கொள்கை பாதிக்கும் என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

இந்நிலையில்,  தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த விசாரணை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Navodaya schools in Tamil Nadu: Madurai High Court ordered the State report, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: அறிக்கை தர தமிழக அரசுக்கு கோர்ட்டு உத்தரவு
-=-