பாகிஸ்தானில் உற்சாகமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா – வீடியோ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உற்சாகமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகளில், நவராத்திரி சிறப்பானதாகும். அண்டசராசரத்தின் ஆதியாகிய தேவியை கொண்டாடும் இந்த விழா வட மாநிலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த விழா இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்ட்டு வருகிறது.

‘ஒன்பது இரவுகள்’  கொண்டாடப்படும் நவராத்திரி, துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள். இருப்பினும், பத்தாவது நாள் மிக முக்கியமான நாளாகும். இது ‘வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை விஜயதசமி என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் வாழும் இந்து சமூகத்தினரும் அங்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=g3kdWFEp1oI&feature=youtu.be