நவராத்திரி விழா: அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து…

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில்,  நவராத்திரி திருவிழாவாயொட்டி, அங்கு வாழும் இந்திய வம்சாவழியினருக்குஅதிபர் வேட்பாளர் ஜோ பிடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

நாடுமுழுவதும் நவராத்தி விழா களைகட்டி உள்ளது. அதுபோல அமெரிக்காவிலும் நவராத்தி விழா அங்கு வசித்து வரும் இந்திய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல உலக நாடுகளிலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாட்கள்  விழாவின் துர்க்கையின் ஒன்பது அவதாரங்களையும் பூஜித்து வழிப்படப்படுகிறது.

அமெரிக்காவின் நியூஜெர்சி, வாஷிங்டன் உள்பட பல மாகாணங்களில் வாழும், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த  இந்துக்கள், தங்களது வீட்டில் நவராத்தி கொழு பொம்மைகளை வைத்து பூஜைகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.  நவம்பர் 3ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்பே டியரசு கட்சி சார்பில், மீண்டும்  போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதுபோல துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்த நிலையில்,  ஜோ பிடன், ஹமலா ஹாரிஸ் ஆகியோர் நவராத்திரி பண்டிகையையொட்டி அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜோபிடன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,  “நவராத்திரி என்னு இந்து திருவிழா தொடங்கும் இந்த நல்ல நேரத்தில், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மீண்டும் நன்மை தீமையை வெல்லட்டும். இந்த நவராத்திரி அனைவருக்கும், நல் வாழ்வினை அளிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.

கமலாஹாரிஸ் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,   “இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது நவராத்திரி வாழ்த்துக்கள், நவராத்ரி கொண்டாடும் அனைவருக்கும், மிகவும் மகிழ்ச்சியான நவராத்திரியாக இருக்கட்டும். அனைவரையும் உள்ளடக்கிய அமெரிக்காவைக் கட்டியெழுப்ப நம் அனைவருக்கும் இது ஒரு உத்வேகமாக இருக்கட்டும்” என   தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குடியரசு கட்சிக்கு இந்தியர்களிடையே பெரும் செல்வாக்கு உள்ளது. அதுபோல கமலாஹாரிசுக்கும், மக்கள் மத்தியில்  நல்ல செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.