வராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான்  நவராத்திரி திருவிழா.
அம்பாள் மகிசாசூரனை வதம் செய்வதற்காக இந்த ஒன்பது நாட்கள் தவம் நோற்ற காலம் தான் இந்த நவராத்திரி. முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி.

நவராத்திரியின் சிறப்புகள்:
நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும். அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். 23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.
நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.
தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.
நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.
கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.
நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.
நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.
ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.
நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

ஒன்பது நாளும் போடவேண்டிய கோலங்கள் :
• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
• மூன்றாம் நாள் –முத்து மலர்
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)
ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:
• முதல்நாள் – தோடி
• இரண்டாம் நாள் – கல்யாணி
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
• நான்காம் நாள் – பைரவி
• ஐந்தாம் நாள் – பந்துவராளி
• ஆறாம் நாள் – நீலாம்பரி
• ஏழாம் நாள் – பிலஹரி
• எட்டாம் நாள் – புன்னாகவராளி
• ஒன்பதாம் நாள் – வஸந்தா
ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:
• முதல் நாள் – மல்லிகை
• இரண்டாம் நாள் – முல்லை
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு
• நான்காம் நாள் – ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் – செம்பருத்தி
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து
ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:
• முதல் நாள் – வாழைப்பழம்
• இரண்டாம் நாள் – மாம்பழம்
• மூன்றாம் நாள் – பலாப்பழம்
• நான்காம் நாள் – கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் – மாதுளை
• ஆறாம் நாள் – ஆரஞ்சு
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் – திராட்சை
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்
ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:
• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் – புளியோதரை
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் – பாயஸôன்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.
சுகமான வாழ்வு , கல்வியில் சிறந்து விளங்க, அரசியலிலும், வேலையிலும் பதவி தொடரவும்,  எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை  செய்து பலம்பெறுங்கள்.
ஓம் சக்தி.