ண்டிகைகள் எதற்காகக் கொண்டாடப்படுகின்றன? அதற்கு விடை காண, பண்டிகைகளைக் கூர்ந்து கவனிப்போம். அனைத்துக்கும் பொதுவான அம்சங்கள் சிலவற்றை எடுத்துப் பார்ப்போம்.
d
பெரியவர்களை வணங்கி ஆசி பெறுகிறோம். என் சின்ன வயதில் நான் என் தாத்தா பாட்டியை வணங்கி எழுந்தால் அவர்கள் எனக்கு ஓரிரு நாணயங்களைக் கொடுப்பார்கள். அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. “ உனக்குப் பிடிச்ச மாதிரி ரிப்பன் வளையல்னு ஏதாவது வாங்கிக்கோ” என்பார் பாட்டி. “உண்டியல்ல சேர்த்து வை, அது நல்ல பழக்கம்” என்பார் தாத்தா. ஆக.. பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும்..முந்தைய தலைமுறைக்கும் அடுத்த  தலைமுறைக்கும் பந்தம் உருவாகிறது. வணங்கினால் ஏதேனும் கிடைக்கும் என்ற குழந்தைத்தனமான எதிர்பார்ப்பில் நாமும் காலில் விழத்தயங்க மாட்டோம். மறைமுகமான நமக்கென்று சிறு தொகையும் அதை செலவழிக்க அல்லது  சேமிக்க சுதந்திரமும் கிடைக்கின்றன,
அடுத்து..
உறவினர் நண்பர்கள் வீட்டுக்குத் தவறாமல் செல்கிறோம். இதனால் உறவு வளர்கிறது. அந்தந்தப் பண்டிகைக்கென்று தனிப்பட்ட தின்பண்டங்களை வகுத்திருக்கிறார்கள். எனவே அவற்றை வருடத்துக்கு ஒரு முறையேனும் செய்ய வாய்ப்பு. பலர் தங்கள் தயாரிப்புக்களைப் பகிர்கிறோம். எனில் எல்லாரும் எல்லாமும் பெறும் சமத்துவம் ஏற்படுகிறது.
a
மேலும் எந்தப் பண்டிகைக்கும் பின்னணியில் ஓர் ஐதீகம் உள்ளது. ஏதேனும் ஒரு புராணக்கதை உள்ளது. எல்லாமே நம்பிக்கை சார்ந்த விஷங்கள்தானே? நாளை எந்த அசுரனும் அழிவான் என்றும் நமக்குப் பொழுது விடியும் என்றும் நம்ப ஆரம்பிக்கும்போது வாழ்வில் ஓர் பிடிப்பு ஏற்படுகிறது.
வண்ணமயமாக உடை அணிகையில் ஓர் தன்னம்பிக்கை பிறக்கிறது.
நவராத்திரியைப் பொறுத்த வரையில் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உகந்தது என்று கருதுகிறோம். படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே சரஸ்வதி முக்கியம் என்று கருதுவதாக என் சிநேகிதி ஒருத்தி சொன்னபோது அவளுக்கு நான் வகுப்பே எடுத்துவிட்டேன்.
ஆய கலைகள் அறுபத்து நான்கினுக்கும் உரிய தாயல்லவா அவள்? ஒரு பூவியாபாரி பூக்கட்டுவதும்கூட ஆயகலைகளில்தான் சேர்த்தி.
நாம் எது செய்தாலும் சொன்னாலும் அது அவள் அருளே. வாக்தேவி  என்பார்கள் அவளை. நாவில் சரஸ்வதி நற்றுணையானால்தான் நம்மால் பேசக்கூட முடியும்.
பாடுபவர்களும் நடனம் ஆடுபவர்களும்  அவள் அருளாலேயே சிறக்கிறார்கள்.
“வாணியைச் சரண்புகுந் தேன்; — அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;
பேணிய பெருந்தவத் தாள், — நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,
என்று ஆனானப்பட்ட பாரதி அவளைச் சரணடைந்ததை நாம் அறிவோம் எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்?
b
அவளை இந்த மூன்று நாட்களும் விடாமல் துதித்துக் கைக்குள் வைத்துக் கொள்வோம். அவளை விடாதாதை அவள் கைவிடாள். அறிவில் ஆண்டியாய் இருப்பவர்கூட அறிவரசராகிவிடுவது உறுதி.
நல்லது…
இப்போது இன்றைய தேவியைப் பார்ப்போம். அதற்கு முன்….
ஒரு சின்னஞ்சிறு எச்சரிக்கை. அம்பாளுக்குப் பல  வடிவங்கள் உண்டு, பல வாகனங்கள் உள்ளன. அவற்றில் சில பயமுறுத்துவதாக இருக்கக்கூடும். அம்மாவைப் பார்த்துக் குழந்தைகள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. திருடன் வேண்டுமானால் காவல்காரனைப் பார்த்து அஞ்சி நடுங்கட்டும்.
எட்டாம் நாளான இன்று இவள் கூஷ்மாண்டா என்ற தேவியாக வந்து அனுக்கிரகிக்கின்றாள்.  இவள் ஜெயரோகிணி என்ற சக்தியாக வருகிறாள். இவள்  நோய்த் தொற்றை அழிப்பவள். அதாவது  தொற்று நோய்த் தடுப்பாற்றல்  கொணடவள். சிவனும் சக்தியும் ஐக்கியமானபோது அவர்களை ஒன்று சேர்த்த ஜோதி இவள். சகல பயங்களையும் போக்குபவள் இவள். இவள் பிரேதவாகனத்தில் வருவதால் நோய்களை அழிப்பவள்.
காசுக்கட்டியால் கோலம் போட வேண்டும். மிகுந்த  கோபம் கொண்டவள். முண்டக மாலை அணிந்தவள். தருணி என்பவளாக வருகிறாள். இவள் கலசத்துக்குள் வனஜாக்ஷியாக உறைகிறாள். வாதுமை அதாவது பாதாம் மற்றும் உலர் பழங்கள் மற்றும்  தேன் இவளுக்கு நைவேத்தியம்.
இவள் ரோஜா நிறப் புடவை அணிந்து நம்மைத் தேடி வருவாள். நாம் வாடா மல்லி (அதாவது வயலட்) நிறச் சேலை அணிந்து அவளைப் பூஜை செய்ய வேண்டும்.
புன்னாகவராளி வாசித்தால் மயங்கி அருள் வழங்கியே செல்வாள்.
நலங்கள் பெறுக தோழியரே. வாழ்த்துக்கள்