aa
சிலர் வருத்தப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ‘’எல்லாரும் பெரிய கொலு வெக்கறாங்க. எங்க வீட்டில் மட்டும் 3 படிதான்” என்றோ கடவுள் சன்னிதானத்திலேயே மூணு பொம்மை எடுத்து வெச்சுட்டேன்” என்றோ சொல்வார்கள்.
இதில் வருத்தமோ வெட்கமோ கூச்சமோ அடைய என்னம்மா இருக்கிறது? அழைத்தவர் குரலுக்கு வருவதுதானே இறைவனின் இயல்பு? நம் மனதில் உள்ள பக்தியின் அளவைத்தான் இறைவன் பார்க்கிறான்.
அந்தப் பத்து நாட்களுமே அந்த பொம்மைகளுக்குள் உள்ள இறைசக்தியை மட்டும் பார்ப்பது நல்லது.
நவராத்திரி விழாவில் இன்னொரு அழகிய அம்சமும் உள்ளது. எல்லோர்  வீட்டுக்கும் எல்லோரும் செல்வதற்கு இது ஒரு அழகிய வாய்ப்பு. சில சிறு மனத்தாபங்கள் மறையவும் தீரவும் இதை ஒரு வாய்ப்பாகக்கூடப் பயன்படுத்தலாமே.
நம் சக்திக்கு ஏற்ற வகையில் தாம்பூலம் அளிக்கலாம்.
என் தாயார் காலத்தில் நவராத்திரியில் வெற்றிலை பாக்கு பழம் மஞ்சள் குங்குமம் மற்றும் சுண்டல் வைத்துக கொடுப்பார்கள். அவ்வளவுதான், மிகவும் வயதான பெண்மணிகள் வந்தால் தேங்காய் வைப்பதுண்டு.
சில அபூர்வ நபர்களுக்கு ரவிக்கை துண்டு வைத்துக் கொடுப்பார்கள். ஒரு முறை யாரோ ஆரம்பித்து வைத்த பழக்கம் நம்மை இப்போது ஆட்டி வைக்க ஆரம்பித்து விட்டது.
a
கிஃப்ட் என்ற ஒரு பழக்கம். உறுதியான சிறிய பித்தளை விளக்குகளையும் சிறு தட்டுக்களையும் வைத்துக் கொடுப்பவர்களை நான் எதுவும் சொல்லவில்லை, உலோகத்தால் ஆன சிறு கடவுள் உருவங்களைக் கொடுப்பது வரைக்கும் சரிதான்.
சிலர் எவர்சில்வர் (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) வைத்துக் கொடுக்கிறார்கள். இந்தப் பழக்கம் அறவே தப்பு என்கிறார் காஞ்சி  பரமாச்சார்யா. அது  இரும்பு, சுமங்கலிகளுக்கு இரும்பு வைத்துக் கொடுப்பது உசிதமில்லை என்கிறார்.
அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது தற்போதைய பிளாஸ்டிக் பொருட்கள். இவர்கள் சமுதாயத்தையும் கெடுத்து எதிர்கால சந்ததிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்த இப்படி ஒரு பாவத்தைச் செய்ய வேண்டுமா?  பெரும்பாலான பொருட்கள் நமக்குப் பயன்படாதவை. எனக்குத் தெரிந்த ஒருவர்வீட்டில் நாலு பேர் வந்தால் ஏதேதோ காரணங்களால் வேறு வேறு விலைமதிப்புள்ள பொருட்களை அவர்கள் கண்முன்னாலேயே தந்து வித்யாசப்படுத்துவார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது அப்படி ஒரு அன்பளிப்பு தேவையா என்றே தோன்றுகிறது, முனபோலவே மாறிவிடலாம் போலும்.
இன்றைய தேவியைப் பற்றிப் பார்க்கலாமா?
இன்றைக்கும் மகாலட்சுமிக்கு உகந்த தினம். அவளை நாள் முழுவதும் மனதுக்குள் துதித்துக் கொண்டே வாருங்கள்.
இன்றைக்கு வாராஹியாக எருமை வாகனத்தில் ஆறு வயதுக் காளியின் உருவத்தில் வருகிறாள். மாத்ருகா ரூபமாக வருவதால் “யாதேவி சர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண சம்ஸ்திதா,
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ” என்று சொல்வது அதிகமாக அவளை ஈர்க்கும் வழியாகும்,
இன்றைக்கு அவள் தசாஸ்தியாக வருகிறாள். சிர சமயங்களில் நான் “என்ன பாவம் செய்தேன் எனக்கு இப்படி ஒரு  கஷ்டம் வந்ததே”  என்று புலம்புகிறோம் அல்லவா, அப்படிப்பட்ட ஜென்மாந்தர பாவங்களை இவள் நீக்குகிறாள். துன்பங்களைத் துடைத்து அழிக்கிறாள். பிரவுடா என்ற நாமம் தரித்து வருகிறாள்.
aaa
பந்துவராளி ராகத்துக்கு சொக்கி அருள்வாள். வித்தைக்கான சன்மானத்தைப் பெற்றுத் தருகிறாள். கடலைப் பருப்பால் மாங்கனி வடிவக் கோலம்  போட வேண்டும்.
இவள்  சர்வதாரித்ரிய நாசினி என்பதால் இவளைத் துதித்தால் ஏழ்மை அறவே அகலும்.
சாம்பல் நிறச் சேலையில் தங்க நிறம் கலந்த  அணிந்து வருவாள். நாம் நீருக்குள் காணும் நீலத்தில் வஸ்திரம் அணிந்து  அவளுக்குப் பூஜை செய்ய வேண்டும்.
அவள் கால்களைப் பன்னீரால் அலம்பி அபிஷேகம் செய்வதாக மானசீக பூஜை மனதுக்குள் நிகழ்த்த வேண்டும். பிறகு கற்பனையில் அவள் கால்களைத் துடைக்க வேண்டும்.
தயிர்சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். மாதுளையும் வெண்ணையும் அதில் கலக்க வேண்டும், வெண்ணைக்கு அவள் வசப்படுவாள்,
பன்றி முகம், தெற்றுப்பல்லுடன் வருவாள். கையில் உலக்கை சூலம் தண்டம் கொண்டு கையில் ஒரு பாம்பைப்பிடித்து எடுத்து  வருவாள்.
இவள் மூன்று வித வாகனங்கள் வருவாள், காரணத்தைப் பொருத்து வாகனம் மாறும். காப்பாற்ற வரும்போது வெள்ளை நிறக் குதிரையில் வருவாள்.  சலங்ககை மாலை அணிந்து வருவாள்.
திருமணமாகாத பெண்கள் தேவி அல்லது மகாலட்சுமிக்கு வரளி மஞ்சளில் மாலை கட்டி சாற்றினால் உடனே மாப்பிள்ளை கிடைப்பார்.
எல்லோருக்கும் எல்லாமும் இனிதாக நிறைவேறி மகிழ்ச்சி நிறைய வாழ்த்துக்கள்.