நாகர்கோவில்

டலுக்கு மீன் பிடிக்கச் சென்று புயலால் காணாமல் போன 1000 மீனவர்களை கடற்படை தேடி வருகிறது

ஓகி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் கடும் மழை பெய்தது.  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, போன்ற மாவட்டங்களில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளகாடாகி உள்ளன.   புயல் லட்சத்தீவை நோக்கி நகர்ந்த போதிலும் கடல் இன்னும் கொந்தளீப்புடன் உள்ளது.   பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

கன்யாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கல் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்று இருந்தனர்.    பலர் வீடு திரும்பிய போதிலும்,  சுமார் 1000 மீனவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை.   அவர்கள் எந்த நிலையில் உள்ளனர் என்பதும் தெரியவில்லை.   அவர்களை மீட்க ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் மத்திய பாதுகாப்புத் துறையை கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது இந்தியாவின் கடற்படைக்கு சொந்தமான 8 கப்பல்கள், 5 விமானங்கள், கடலோரக் காவற்படையினருக்கு சொந்தமான 8 கப்பல்கள், 2 விமானங்கள் ஆகியவை மூலம் தேடப்பட்டு வருகின்றனர்.   இதற்கிடையே குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் கேரள மாநிலம் திருச்சூர் அருகே மீட்கப்பட்டு அவர்கள் பேருந்து மூலம் அழைத்து வரப்பட உள்ளதாகவும் செய்திகல் வந்துள்ளன.  இது தவிர சில படகுகள் லட்சத்தீவு பகுதியில் உள்ள ஒரு ஆளில்லா தீவிக்கு புயலால் அடித்துச் செல்லப்பட்டு அங்கு சில மீனவர்கள் உள்ளதாக உறவினர்களுக்கு தகவல் வந்துள்ளது.  அவர்களும் விரைவில் மீட்கப்படுவார் என தெரிய வருகிறது.