உடல்நலம் பாதிப்பு: சிகிச்சைக்காக லண்டன் சென்றார் நவாஸ் ஷெரீப்

லாகூர்:

ல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஷ்ஷெரீப் மீது பனா பேப்பர் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இதனால் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அவரை பரிசோதித்த சிறை மருத்துவர்கள், உடனடியாக கூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக லண்டன் செல்ல நவாஸ் ஷெரீப் தரப்பில், அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவர் வெளிநாடு செல்ல, பாகிஸ்தான் அரசு தடை விதித்திருந்தது. இதை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இம்ரான்கான் அரசு, ஷெரீப் லண்டன் செல்ல அனுமதி அளிக்கும் வகையில், அவரது பெயரை தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து  அகற்றியது. இதையடுத்து அவருக்கு லாகூர் நீதிமன்றமும் வெளிநாடு செல்ல 8 வாரங்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று  நவாஸ் ஷெரீப், லாகூர் விமான நிலையத்தில் இருந்து, மருத்துவக் குழுவுடன் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  புறப்பட்டார் நவாஸ் ஷெரீப் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் உள்ள சார்லஸ் டவுன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளிக்க இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.