நவாஸ் ஷெரீப்பும், அவரது மகளும் விரைவில் நாடு திரும்புகின்றனர்…..தேர்தலில் இருந்து மரியம் விலகல்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு அவன்பீல்டு ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் மரியம் நவாஸ் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

லாகூரில் உள்ள என்.ஏ 127 மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பி.பி. 173 ஆகிய இரண்டு தொகுதிகளில் மரியம் நவாஸ் போட்டியிட இருந்தார். இரு தொகுதிக்கும் வேறு 2 வேட்பாளர்களை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

என்.ஏ 127 தொகுதியில் அலி பர்வேஷ் மாலிக்கும், என்.ஏ 173 தொகுதியில் இர்பான் ஷாஃபி கோக்தர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் தண்டனை வதிக்கப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தந்தையும், தானும் மேல் முறையீடு கெடு முடிவதற்குள் பாகிஸ்தான் திரும்புவோம் என்று மரியம் தெரிவித்துள்ளார்.