இஸ்லாமாபாத்,

னாமா பேப்பர்ஸ் விவகாரத்தால் உச்ச நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவராக, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பனாமா பேப்பர் விவகாரத்தில் பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவையும் பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

உலகம் முழுவதும் உள்ள  பிரபலங்கள் கணக்கில் காட்டப்படாத பல கோடி சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளதாக பானா பேப்பர்ஸ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்  பெயரும் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக  பிரதமர் நவாஸ் ஷெரிப்பிடம்  விசாரணை நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்த விசாரணைணை தொடர்ந்து நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவராக, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த கட்சியின் ஆட்சிதான் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.